18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » மக்களின் போராட்டத்தால் உசிலம்பட்டி வரை ரயில் சோதனை ஓட்டத்திற்கு சோதனையா..?

மக்களின் போராட்டத்தால் உசிலம்பட்டி வரை ரயில் சோதனை ஓட்டத்திற்கு சோதனையா..?

எழுதியவர்: mohan January 24, 2020, 2:48 pm

மதுரை உசிலம்பட்டி ரயில் சோதனை ஓட்டத்தில் சோதனை ஊருக்கு செல்லும் பாதை விட வேண்டும் என பல்வேறு பகுதிகளில் பொதுமக்கள் எதிர்ப்பு இரயில்வே போலிசார் சமரசம்.மதுரை – உசிலம்பட்டி ரயில் நிலையங்களுக்கு இடையே அகல ரயில் பாதை அமைக்கும் பணி நிறைவு பெற்றுள்ளது. இந்தப் பகுதியில் ரயில் போக்குவரத்து துவங்குவதற்கான ஆயத்த பணிகள் நடைபெற்று வருகின்றன.

இந்த 37 கிலோ மீட்டர் தூரம் உள்ள புதிய அகல ரயில் பாதையில் தென் மண்டல பாதுகாப்பு ஆணையர் மனோகரன், நேற்று மோட்டார் டிராலி மூலம் பாதுகாப்பு சோதனைகள் செய்தார்.இன்று மாலையில் ரயில் மூலம் அதிவேக சோதனை ஓட்டம் நடத்தி ஆய்வு மேற்கொள்ள இருக்கிறார். பின்பு அவர் ரயில் பாதைக்கான பாதுகாப்பு சான்றிதழ் அளித்த பிறகு ரயில் போக்குவரத்து துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பாதுகாப்பு ஆணையருடன் மதுரை கோட்ட ரயில்வே மேலாளர் லெனின், முதன்மை நிர்வாக அதிகாரி எ.கே. சின்கா, முதன்மை சமிக்ஞை பொறியாளர் வெங்கடாசலம் ஆகியோர் இந்த சோதனை ஓட்டத்தில் பயணம் செய்ய உள்ளனர்.இந்நிலையில் மதுரை உசிலம்பட்டி இடையே மதுரை காமராசர் பல்கலைக்கழகம் அருகே உள்ள ஆலம்பட்டி கிராமத்தில் ஊருக்கு செல்கிற வழியில் பாதை விட அல்லது லெவல் கிராசிங் அமைக்க வலியுறுத்தி, அக்கிராம மக்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர் .

இதுகுறித்து ரெயில்வே தரப்பில் இருந்து எந்த முயற்சியும் எடுக்காத காரணத்தால் இன்று நடைபெறும் சோதனை ஓட்டத்திற்கு சோதனை ஏற்பட்டுள்ளது. தண்டவாளம் முழுவதும் இரயில்வே போலீசார் மற்றும் காவல்துறையினர் குவிக்கப்பட்டு உள்ளனர்.இதற்கிடையே ரயில்வே போலீஸார் மேற்கொண்ட சமாதான நடவடிக்கை காரணமாக ஆலம்பட்டி கிராம மக்கள் தற்காலிகமாக போராட்டத்தை ஒத்தி வைத்துள்ளனர்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!