கீழக்கரையில் கடந்த 2012ம் ஆண்டில் கீழக்கரை நகராட்சிக்கு சொந்தமான இடத்தில் ரூ.21 லட்சம் செலவில் குப்பைக் கிடங்கு கட்டப்பட்டது. அந்த கிடங்கு ஆரம்பம் செய்த பின்பு கீழக்கரை நகர் சந்தித்து வந்த வீதியில் கொட்டுப்பட்டு வந்த குப்பைப் பிரச்சினை ஓரளவு கட்டுப்பாட்டுக்குள் வந்தது.

தற்பொழுது அக்குப்பைக் கிடங்கை மேம்படுத்த மாநில அரசால் நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக அறியப்படுகிறது. இந்த புதிய மேம்படுத்தும் திட்டத்தின் மூலம் மக்கும் மற்றும் மக்கிப் போகாத குப்பைகள் என பிரித்தெடுத்து கழிவுகளை அப்புறப்படுத்தும் பணிகள் மேற்கொள்ளப்படும். இதன் ஆரம்பக் கட்டமாக மதுரை தியாகராயக் கல்லூரியின் உதவியுடன் மண் ஆய்வு (Soil Report) செய்யும் பணி இன்று முதல் கீழக்கரை நகராட்சி ஆணையர் சந்திரேசகர் (பொறுப்பு) தலைமையில் ஆரம்பம் ஆனது. இப்பணிக்காக கீழக்கரை நகராட்சி ஆயவாளர் மற்றும் பல துணைப் பணியார்கள் பணி நடக்கும் இடத்தில் குழுமியுள்ளார்கள்.

இந்த முதல் கட்ட ஆய்வு சம்பந்தமான ஆவணங்கள் கிடைத்த பின்பு முறையாக அரசாங்கத்திற்க சமர்பிக்கப்பட்டு முறையான கழிவு மேலான்மை திட்டம் ( Waste Management System) ஆரம்பம் செய்யப்படும் என்று அறியப்படுகிறது. இத்திட்டம் ஆரம்பம் செய்யப்பட்டால் கீழக்கரை நகராட்சியின் திட்ட கழிவு திட்டம் இன்னும் திறம்பட செயல்பட வாய்ப்புகள் உள்ளன.




You must be logged in to post a comment.