18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » சாலை பாதுகாப்பு வார விழா

சாலை பாதுகாப்பு வார விழா

எழுதியவர்: mohan January 22, 2020, 7:51 pm

31-வது சாலை பாதுகாப்பு வார விழாவை (20.01.2020 to 27.01.2020) முன்னிட்டு காவல்துறையினர், ஊர்க்காவல் படையினர், பள்ளி மாணவ மாணவியர்கள் கலந்துகொண்ட விழிப்புணர்வு பேரணியை மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் .மணிவண்ணன்  கொடியசைத்து தொடங்கி வைத்தார். விழிப்புணர்வு பேரணியானது மேலூர் பேருந்து நிலையத்திலிருந்து தொடங்கி சந்தப்பேட்டை மற்றும் யூனியன் ஆபீஸ் வரை சென்று முடிவடைந்தது. மேலும் சாலை விதிகளை சரியாக பின்பற்றி வந்த வாகன ஓட்டிகளுக்கு ரோஜா மலர் கொடுத்து வாழ்த்தி, வாகனம் ஓட்டுபவர்கள் கண்டிப்பாக தலைக்கவசம் மற்றும் கார்களில் பயணிக்கும் போது சீட் பெல்ட் அணிந்து பயணிக்குமாறு மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மணிவண்ணன்  அறிவுரை வழங்கினார்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!