17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » மக்கள் பாதை சார்பாக மரக்கன்றுகள் நடும் விழா

மக்கள் பாதை சார்பாக மரக்கன்றுகள் நடும் விழா

எழுதியவர்: mohan January 22, 2020, 2:32 pm

இராஜசிங்கமங்கலம் அருகே சோழந்தூரில் மக்கள் பாதை தாய்மண் திட்டம் கீழ் மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றது.சோழந்தூர் பள்ளிவாசல் பின்புறம் உள்ள பகுதிகளில் மரக்கன்றுகள் நட்டு பாதுகாப்பு வேலியும் வழங்கப்பட்டது.இராமநாதபுரம் மாவட்ட மக்கள் பாதை ஒருங்கிணைப்பாளர் நூருல் அமீன் தலைமை தாங்கினார்.இராஜசிங்கமங்கலம ஒன்றிய பொறுப்பாளர் ஆசிரியர் பாதுஷா முன்னிலை வகித்தார்.

இராமநாதபுரம் மாவட்ட மக்கள் பாதை துணை ஒருங்கிணைப்பாளர் நூருல் அமீன் மரக்கன்றுகள் நடுவதின் அவசியத்தை எடுத்துரைத்தார். மேலும் சோழந்தூர் பகுதிகளில் பசுமைப்புரட்சி ஏற்பட அனைவரும் மரக்கன்றுகள் நட வேண்டி இளைஞர்களிடம் வலியுறுத்தப்பட்டது.இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினர்களாக சமூக ஆர்வலர் முகம்மது முபசீர், ஆசிரியர் இப்ராஹிம் மற்றும் மாணவர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!