18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » தென்காசி அருகே அழகு முத்து மாரியம்மன் திருக்கோவிலில் பூக்குழி இறங்கும் நிகழ்ச்சி

தென்காசி அருகே அழகு முத்து மாரியம்மன் திருக்கோவிலில் பூக்குழி இறங்கும் நிகழ்ச்சி

எழுதியவர்: mohan January 22, 2020, 1:53 pm

தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரத்தை அடுத்துள்ள அருணாப்பேரியில் பழமை வாய்ந்த அழகுமுத்து மாரியம்மன் திருக்கோயில் அமைந்துள்ளது. இந்த கோயில் மிகவும் பிரசித்தி பெற்ற கோயிலாகும். இந்த கோயிலில் ஆண்டுதோறும் 10 நாட்கள் கும்பாபிஷேக விழா நடைபெறுவது வழக்கம்.இந்த வருடத்தின் 57 ஆம் ஆண்டு திருவிழா, 41-ம் நாள் மண்டல பூஜை மற்றும் கும்பாபிஷேக விழா கடந்த 12 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. நாள் தோறும் அம்மனுக்கு சிறப்பு அலங்காரம், தீபாராதனை நடைபெற்றது.

திருவிழாவின் முக்கிய நிகழ்வான பூக்குழி இறங்கும் வைபவம் இரவு தொடங்கி  அதிகாலை வரை நடைபெற்றது. வழக்கமாக எல்லா கோவில்களிலும் நடைபெறும் பூக்குழியில் விறகுகளை எரித்து சமமாக விரித்து அதில் பக்தர்கள் பூக்குழிஇறங்குவா். ஆனால் இந்த ஆலயத்தில் விறகுகளை எரித்து நெருப்பு குவியலாக குவித்து வைத்த நெருப்பில், பக்தர்கள் பூக்குழி இறங்கி நெருப்பினை சமப்படுத்தி பூக்குழி இறங்கினர்.இந்த விழாவில் பாவூர்சத்திரம், தென்காசி சுற்றுவட்டார பகுதியில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டனர்.

செய்தியாளர்அபுபக்கர்சித்திக்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!