17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » போதையில் மிதந்தவர், கிணற்றில் மிதந்தார், தீயணைப்பு படையினர் உடலை மீட்டனர்

போதையில் மிதந்தவர், கிணற்றில் மிதந்தார், தீயணைப்பு படையினர் உடலை மீட்டனர்

எழுதியவர்: mohan January 22, 2020, 1:45 pm

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி, சேவூரில் கிணற்றிலிருந்து, தீயணைப்பு படையினர் ஆண் சடலத்தை மீட்டனர்.சேவூர் கிராமம் காலனியில் வசித்து வருபவர் ராஜேந்திரன், 50  கூலித் தொழிலாளியான ராஜேந்திரன் மது அருந்திவிட்டு வயல்வெளியில் சென்றுகொண்டிருந்தபோது சக்திவேல் என்பவரின் நிலத்தில் உள்ள பெரிய கிணற்றில் தவறி போதையில் விழுந்துள்ளார். உயிரிழந்து மிதந்து கிடந்தவரை அப்பகுதியில் இருந்தவர்கள் சடலம் இருப்பதை பார்த்து காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்த காரணத்தால், தீயணைப்பு படையினர் வந்து உடலை மீட்டெடுத்தனர்.உடலை பிரேத பரிசோதனைக்காக ஆரணி அரசு மருத்துவமனைக்கு போலீசார் அனுப்பி வைத்தனர்.ராஜேந்திரன் குடிபோதையில் இறந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!