18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » கீழக்கரை செய்திகள் » செய்திகள் » கீழக்கரையில் நடைபெற்ற “Citizenship Students Conference”- “மாணவர்களுக்கான குடியுரிமை கருத்தரங்கம்”..

கீழக்கரையில் நடைபெற்ற “Citizenship Students Conference”- “மாணவர்களுக்கான குடியுரிமை கருத்தரங்கம்”..

எழுதியவர்: ஆசிரியர் January 22, 2020, 8:45 am

கீழக்கரை மாணவர் கூட்டமைப்பு சார்பாக முதல் அமர்வாக கீழக்கரையில் நேற்று (21/01/2020) “Citizenship Students Conference”-“மாணவர்களுக்கான குடியுரிமை கருத்தரங்கம்” நடைபெற்றது.

முதல் கட்டமாக கீழக்கரையை சார்ந்த பள்ளி கல்லூரி மாணவர்கள் 54 பேர் கலந்துகொண்டனர். இக்கூட்டத்திற்கு ஜாஃபிர் சுலைமான், இமாம் ஹமீது ரஹ்மான் சலாஹி, பாதுஷா, காதர் ஆகியோர் கலந்துகொண்டு சிறப்புரை நிகழ்த்தினர்.  பின்னர் அதை தொடர்ந்நு மாணவர்களின் கேள்விகளுக்கும் பதில் அளித்தனர்.

இதில் CAA NRC NPR போன்ற சட்டங்களின் விளக்கம் மற்றும் விளைவுகள் பற்றி விவரிக்கப்பட்டு சந்தேகங்களுக்கு விளக்கம்  அளிக்கப்பட்டது.

பின் கீழக்கரை மாணவர்களை ஒன்றுப்படுத்துவது மற்றும் கூட்டமைப்பின் செயல்பாடுகள் குறித்து விவாதிக்கப்பட்டு பிறகு பின் வரும் தீர்மனகள் நிறைவேற்றப்பட்டது.

1.கீழக்கரையில் உள்ள பல்வேறு தெருக்கள் சார்ந்த சங்கங்கள், அமைப்புகள் வாரியாக மாணவர்களை கூட்டமைப்பாக ஒன்றுப்படுத்துவது.

2. பள்ளி, கல்லூரிகளில் மாணவர்களுக்கு CAA NRC NPR பற்றியான விழிப்புணர்வு செய்வது.

3..கீழக்கரை மாணவர் கூட்டமைப்பிற்கு பொறுப்பாளர்களை தெரு சார்ந்த சங்கங்கள் மற்றும் அமைப்புகள் வாரியாக நியமிப்பது.

4.ஆலோசனை குழு அமைப்பது,

அதை தொடர்ந்து ஆலோசனை கூட்டம் நிறைவு பெற்றது.
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!