17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » அதிமுகவில் உள்ள அனைவரும் உயர்ந்த இடத்திற்கு வரமுடியும்: முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி.! 

அதிமுகவில் உள்ள அனைவரும் உயர்ந்த இடத்திற்கு வரமுடியும்: முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி.! 

எழுதியவர்: Askar January 21, 2020, 11:17 pm

முன்னாள் முதலமைச்சர் டாக்டர் எம்ஜிஆரின் 103வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் சேலம் மாவட்டம் ஆத்தூரில் இன்று நடைபெற்று வருகிறது. இதில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டு பேசினார்.

இந்த விழாவில் முதலமைச்சர் பழனிசாமி பேசியதாவது,

அதிமுக கொடியில் அண்ணாவின் உருவத்தை பொருத்தியவர் எம்.ஜி.ஆர். திரைப்படங்கள் மூலம் ஆக்கப்பூர்வமான கருத்துகளை சமுதாயத்தில் எம்.ஜி.ஆர். புகுத்தினார். தற்போது ஏதேதோ தலைப்புகளில் திரைப்படங்கள் வருகின்றன, ஒரு படம் கூட மனதில் நிற்பதில்லை.

கூட்டணி கட்சிகளை எந்த காலத்திலும் திமுக மதித்தது கிடையாது. திமுகவுடன் கூட்டணி வைத்து காங்கிரஸ் கட்சி பரிதாபமான நிலைக்கு சென்றுவிட்டது.

திமுகவில் கலைஞர் கருணாநிதிக்கு பிறகு அவரது மகன் மு.க.ஸ்டாலின் இளைஞரணி செயலாளராக நியமிக்கப்பட்டார். தற்போது மு.க.ஸ்டாலினின் மகன் உதயநிதி ஸ்டாலினுக்கு அந்த பதவி வழங்கப்பட்டுள்ளது. ஒரு சாதாரண நபர் திமுகவில் உயர்ந்த பதவிக்கு வர முடியுமா. ?

அதிமுகவில் உள்ள அனைவரும் உயர்ந்த இடத்திற்கு வரமுடியும். அதிமுகவில் இருப்பவர்கள் அனைவருமே முதல்வர் ஆவதற்கான தகுதி உடையவர்கள். ஒரு பழனிசாமி அல்ல. ஓராயிரம் பழனிசாமிகள் அதிமுகவில் உள்ளனர்.

இந்தியாவிலேயே விவசாயிகளுக்கு பயிர் காப்பீட்டு திட்டம் மூலம் அதிகமான இழப்பீட்டை பெற்றுத்தந்தது அதிமுக அரசு. இடைத்தேர்தல் வெற்றி மூலம் அதிமுக ஆட்சிக்கு மக்கள் நற்சான்றிதழ் வழங்கினர். நாங்குநேரி, விக்கிரவாண்டியில் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றோம் ” என்று அவர் கூறினார்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!