17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » தென்காசியில் சாலை பாதுகாப்பு வார விழா மற்றும் விழிப்புணர்வு பேரணி-மாவட்ட ஆட்சியர் கொடியசைத்து துவக்கி வைத்தார்.!

தென்காசியில் சாலை பாதுகாப்பு வார விழா மற்றும் விழிப்புணர்வு பேரணி-மாவட்ட ஆட்சியர் கொடியசைத்து துவக்கி வைத்தார்.!

எழுதியவர்: Askar January 21, 2020, 8:23 pm

தென்காசியில் சாலை பாதுகாப்பு வார விழா மற்றும் விழிப்புணர்வு பேரணி-மாவட்ட ஆட்சியர் கொடியசைத்து துவக்கி வைத்தார்.!

தமிழகம் முழுவதும் 31-வது சாலை பாதுகாப்பு வார விழா கொண்டாடப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக புதிய மாவட்டமான தென்காசியில் போக்குவரத்து துறை மூலம் சாலை பாதுகாப்பு வார விழா கொண்டாடப்பட்டு வருகிறது.

இந்நிலையில் தென்காசி காசி விஸ்வநாதர் ஆலயம் முன்பு சாலை பாதுகாப்பை வலியுறுத்தி விழிப்புணர்வு பேரணி 21.01.2020 காலை நடைபெற்றது. விழிப்புணர்வு பேரணியை தென்காசி மாவட்ட ஆட்சியர் அருண் சுந்தர் தயாளன் தொடங்கி வைத்தார். பேரணி நகரின் முக்கிய வீதிகள் வழியாக சென்று பின்னர் பழைய பேருந்து நிலையத்தை அடைந்தது.

பேரணியின் போது சாலை பாதுகாப்பு குறித்த துண்டு பிரசுரங்கள் மற்றும் பதாகைகளை ஏந்தி பள்ளி மாணவ மாணவிகள் சென்றனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாட்டினை தென்காசி மாவட்ட போக்குவரத்து துறையை மற்றும் அனைத்து ஓட்டுநர் பயிற்சி பள்ளி நிர்வாகிகள் செய்திருந்தனர். இந்த நிகழ்ச்சியில் தென்காசி வட்டார போக்குவரத்து அலுவலர் கருப்பசாமி காசி காவல் ஆய்வாளர் ஆடிவேல் மோட்டார் வாகன ஆய்வாளர் விஜய் உள்ளிட்ட அரசு அதிகாரிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

செய்தியாளர் அபுபக்கர்சித்திக்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!