17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » 18 துணை ஆட்சியர்,19 காவல்துறை துணைக் கண்காணிப்பாளர், குரூப் 1 பணியிடங்கள் விவரம் அறிவிப்பு.!

18 துணை ஆட்சியர்,19 காவல்துறை துணைக் கண்காணிப்பாளர், குரூப் 1 பணியிடங்கள் விவரம் அறிவிப்பு.!

எழுதியவர்: Askar January 21, 2020, 12:20 pm

  18 துணை ஆட்சியர்,19 காவல்துறை துணைக் கண்காணிப்பாளர், குரூப் 1 பணியிடங்கள் விவரம் அறிவிப்பு.!

டி.என்.பி.எஸ்.சி நடத்தும் குரூப் 1 தகுதித் தேர்வுக்கான 69 காலிப்பணியிடங்களுக்கான விவரங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் மூலம் துணை ஆட்சியர், துணை காவல்துறை கண்காணிப்பாளர், வணிகவரித்துறை உதவி ஆணையர் உள்ளிட்ட 69 காலிப் பணியிடங்களுக்கு நேற்று(ஜனவரி 20 ந் தேதி) முதல் ஆன்லைன் மூலம் விண்ணப்பம் தொடங்கியது.

இதுகுறித்து தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையச் செயலாளர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் குருப் 1 பணியில் அடங்கிய காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை 20-ம் தேதி வெளியிட்டுள்ளது.

தேர்வர்கள் ஜனவரி 20 ந் தேதி முதல் பிப்ரவரி 19 ந் தேதி வரையில் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்.

இவர்களுக்கான முதல்நிலை எழுத்துத் தேர்வு ஏப்ரல் மாதம் 5-ந் தேதி நடத்தப்படும்.

குருப் 1 தேர்விற்கான தகுதி, வயது வரம்பு, இட ஒதுக்கீட்டு விபரங்கள், தேர்வு முறைகள் உள்ளிட்ட விபரங்கள் 20-ம் தேதி தேதி தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் www.tnpsc.gov.in, www.tnpsc.exam.net, www.tnpsc.exam.in என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன.

மேலும் துணை ஆட்சியர் பதவிக்கு 18 பணியிடங்கள், துணை காவல்துறை கண்காணிப்பாளர் 19 பணியிடங்கள், வணிகவரித்துறை உதவி ஆணையர் 10 பணியிடங்கள், கூட்டுறவுத்துறை துணை பதிவாளர் 14, உதவி இயக்குநர் ஊரக வளர்ச்சி 7 பணியிடங்கள், மாவட்ட தீயணைப்பு மற்றும் மீட்புத்துறை அதிகாரி ஒரு பணியிடம் உள்ளிட்டவை இந்த ஆண்டுக்கான அறிவிப்பில் இடம் பெற்றுள்ளது.

இந்த ஆண்டிலேயே குருப் 1 தேர்வு முடிவுகளை வெளியிடுவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.

மேலும் குருப் 1 தேர்வில் தமிழுக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் இந்தாண்டு முதல் பாடத்திட்டத்தில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!