17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » போதிய விலை கிடைக்காமல் விவசாயிகள் வேதனை.!

போதிய விலை கிடைக்காமல் விவசாயிகள் வேதனை.!

எழுதியவர்: Askar January 21, 2020, 12:03 pm

உசிலம்பட்டி பகுதியில் மொச்சை காய்கள் விளைச்சல் அதிகரித்துள்ளது. ஆனால் போதிய விலை கிடைக்கவில்லை என விவசாயிகள் வேதனை.!

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளான சந்தைப்பட்டி,எருமார்பட்டி, கொப்பிலிபட்டி போன்ற பகுதிகளில் மானாவாரி பயிரான மொச்சை பயிர்களை விவசாயிகள் அதிகம் பயிரிட்டுள்ளனர். இந்நிலையில் பயிரிடப்பட்ட மொச்சை செடிகள் 90 நாட்களுக்கு பின் விளைச்சல் அடைந்துள்ளது. மேலும் மார்கழி மாத கடும் பனிப் பொழிவில் விளைச்சல் அதிகரித்து சாகுபடியை விவசாயிகள் துவங்கியுள்ளனர்.இந்நிலையில் சாகுபடி செய்த மொச்சை சாய்களை உசிலம்பட்டி காய்கறி ஏல சந்தைக்கு விற்பனைக்கு எடுத்து சென்றால் மொச்சை காய்கள் 1 கிலோ 10 ரூபாய் முதல் 15 ரூபாய் வரை ஏலம் நடைபெற்று வருகிறது. தற்போது வரத்து அதிகரித்துள்ளதால் மொச்சை காய்களை வியபாரிகள் வாங்குவதற்கு தயக்கம் கொள்கின்றனர். வியர்வை சிந்தி கஷ்டப்பட்டு விவசாயம் செய்து விற்பனைக்கு கொண்டு சென்றால் போதிய விலை கிடைக்கவில்லை என விவசாயிகள் கண்ணீர் மல்க வேதனை தெரிவிக்கின்றனர். உடனே தமிழக அரசு கொள்முதல் நிலையம் அமைத்து போதிய விலை கிடைக்க வழிவகை செய்ய நடவடிக்கை எடுக்குமாறு விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!