17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » பொது அமைதியை சீர்குலைக்கும் வகையில் பேசியதாக ரஜினி மீது மகுடஞ்சாவடி காவல் நிலையத்தில் புகார் செய்யப்பட்டுள்ளது.!

பொது அமைதியை சீர்குலைக்கும் வகையில் பேசியதாக ரஜினி மீது மகுடஞ்சாவடி காவல் நிலையத்தில் புகார் செய்யப்பட்டுள்ளது.!

எழுதியவர்: Askar January 20, 2020, 11:04 pm

பொது அமைதியை சீர்குலைக்கும் வகையில் பேசியதாக ரஜினி மீது மகுடஞ்சாவடி காவல் நிலையத்தில் புகார் செய்யப்பட்டுள்ளது.

சேலம் மாவட்டம், மகுடஞ்சாவடி காவல் நிலையத்தில் திராவிட விடுதலை கழகத்தினர்  நடிகர் ரஜினிகாந்த் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி புகார் மனு அளித்தனர். அந்த மனுவில், சென்னையில் நடைபெற்ற துக்ளக் பத்திரிகை ஆண்டு விழாவில் தந்தை பெரியார் பெயருக்குக் களங்கம் விளைவிக்கும் வகையில் அவதூறாக ரஜினி பேசியுள்ளார். இது உண்மைக்கு புறம்பானது. வதந்தியைப் பரப்பி, அதன் மூலம் பொது அமைதியைக் சீர் குலைக் கும் வகையில் அவர் பேசியுள்ளார். எனவே, நடிகர் ரஜினி மீது வழக்குப்பதிவு செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என இளம்பிள்ளை திராவிடர் விடுதலைக் கழகத்தின் நகர செயலாளர் தங்கதுரை தலைமையில் காவல் நிலையத்தில் அளித்தனர்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!