18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » கீழக்கரை செய்திகள் » செய்திகள் » மாவட்ட செய்திகள் » சாலை பாதுகாப்பு வார முதல் நாளே சாலை விபத்து.. அரசு பேருந்து மோதி இருவர் பலி..

சாலை பாதுகாப்பு வார முதல் நாளே சாலை விபத்து.. அரசு பேருந்து மோதி இருவர் பலி..

எழுதியவர்: ஆசிரியர் January 20, 2020, 10:46 pm

மதுரை அடுத்த கீழமாத்தூர் அருகே இரவு எட்டு முப்பது மணி அளவில் இருசக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்த விருதுநகர் மாவட்டம் திருச்சுழியை  சேர்ந்தவர் என முதற்கட்ட விசாரணையில் தெரிய வருகிறது.

இவர்கள் இருசக்கர வாகனத்தில் மதுரையை நோக்கி வந்து கொண்டிருந்த பொழுது அரசு பேருந்து ஒன்று  வேகமாக மோதியதில் இருசக்கர வாகனத்தில் வந்தவர்கள் இருவர் நிகழ்விடத்திலேயே பலியானார்கள்.

மேலும் இவர்கள் ஹெல்மெட் அணியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்த விபத்து குறித்து தகவலறிந்த மதுரை நாகமலை புதுக்கோட்டை போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை செய்து வருகிறார்கள்.  சாலை பாதுகாப்பு வார விழா நடத்தப்பட்ட முதல் நாலே இருவர் அரசு பேருந்து மோதி பலியானது அப்பகுதியில் அதிர்வை ஏற்படுத்தி உள்ளது.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!