பொது நிகழ்ச்சிகள், திருவிழாக்கள் முழு நேரமும் நடத்த அனுமதிக்க வேண்டும்-அனைத்து சமுதாய ஆலோசனை கூட்டத்தில் தீர்மானம்.! நிகழ்ச்சிகள், திருவிழாக்கள் முழு நேரமும் நடத்த அனுமதிக்க வேண்டும்-அனைத்து சமுதாய ஆலோசனை கூட்டத்தில் தீர்மானம்.!
நெல்லை, தென்காசி மாவட்டத்தில் கிராமப்புறம் மற்றும் நகர்ப்புறங்களில் திருவிழா மற்றும் பொது நிகழ்ச்சிகளை இரவு முழு நேரமும் நடத்த அனுமதிக்க வேண்டும் என்று பாவூர்சத்திரத்தில் நடைபெற்ற அனைத்து சமுதாய ஆலோசனை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
பாவூர்சத்திரம் வென்னிமலை முருகன் கோவில் வளாகத்தில் நடைபெற்ற நெல்லை தென்காசி மாவட்ட அனைத்து சமுதாய மக்கள் ஆலோசனை கூட்டத்திற்கு தட்சன மாற நாடார் சங்க தலைவர் ஆர்.கே.காளிதாசன் தலைமை வைத்தார். வென்னிமலை முருகன் கோவில் நிர்வாக குழு தலைவர் எம்.கே.வி.கே.பி. ஜெயச்சந்திரன், செயலாளர் திருமலை குமாரசாமி, தொழிலதிபர் கருத்தப்பாண்டி நாடார், பாவூர்சத்திரம் தினசரி மார்க்கெட் செயலாளர் நாராயணசிங்கம், பாவூர்சத்திரம் வணிகர்கள் சங்க தலைவர் பாலசுப்பிரமணியன், தங்கவேல் செட்டியார் முன்னிலை வகித்தனர். வக்கீல் சாக்ரடீஸ் தொகுத்து வழங்கினார். ஆர்.சரவணண் வரவேற்றார். வென்னிமலை முருகன் கோவில் பொருளாளர் கே.ஆர்.பால்துரை, யூனியன் முன்னாள் தலைவர் எஸ்.கே.டி.பி.காமராஜ், தட்சன மாற நாடார் சங்க கல்லூரி ஆட்சி மன்ற குழு தலைவர் கணேச நாடார், கடையம் முன்னாள் யூனியன் தலைவி செல்வி சங்கு கிருஷ்ணன், முன்னாள் சேர்மன் சேம்பர் செல்வராஜ், மைலப்பபுரம் பிரபாகரன், குமரன் பன்னையார் மற்றும் அனைத்து சமுதாய பிரமுகர்கள் கலந்து கொண்டு பேசினர்.
நெல்லை, தென்காசி மாவட்டங்களில் கிராமப்புறம் மற்றும் நகர்ப்புறங்களில் திருவிழா மற்றும் பொது நிகழ்ச்சிகளை முன்பு இருந்தது போல் இரவு முழு நேரமும் நடத்த அனுமதிக்க வேண்டும் என்று இந்த கூட்டத்தில் தீர்மானம் நிறை வேற்றப்பட்டது.
இந்த கூட்டத்தில் பாவூர்சத்திரம், குறும்பலாப்பேரி, கீழப்பாவூர், திப்பணம்பட்டி, புல்லுக்காட்டு வலசை, மடத்தூர், ஆய்க்குடி, சுரண்டை, ஆலங்குளம், அம்பாசமுத்திரம், திசையன்விளை, உடன்குடி, வள்ளியூர், அச்சன்புதூர், செங்கோட்டை, புளியங்குடி, உள்பட அனைத்து ஊர்களில் இருந்தும் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கலந்து கொண்டனர். பிச்சையா நன்றி கூறினார்.
செய்தியாளர் அபுபக்கர்சித்திக்




You must be logged in to post a comment.