பொங்கல் விடுமுறை முடிவடைந்து சென்னை மற்றும் கோவை செல்ல வசதியாக தென்காசி மாவட்டம் சுரண்டையிலிருந்து தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் சார்பில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டன.ஏற்கனவே தனியார் பேருந்துகளில்
விழாக்காலங்களை முன்னிட்டு கட்டணங்கள் பல மடங்கு கூடுதலாக வசூலித்த நிலையில், சுரண்டையிலிருந்து சிறப்பு அரசு பேருந்துகள் அரசு நிர்ணயித்துள்ள சரியான கட்டணத்தில் இயக்கப்பட்டது.இது குறித்து பள்ளிகல்லூரி மாணவ மாணவிகள்,பயணிகள் கூறுகையில் தங்களுக்கு பெரிதும் பயனாக இருந்ததாகவும், சிறப்பு பேருந்துகளை இயக்கிய அரசு போக்குவரத்து கழக அதிகாரிகளுக்கு நன்றி தெரிவிப்பதாகவும் கூறினர்.சிறப்பு பஸ்களின் அனைத்து இருக்கைகளும் நிறைந்த நிலையில் சுமார் 60 க்கும் மேற்பட்டோர் தென்காசி, திருநெல்வேலி, சென்று மாறி சென்றனர்.ஆகவே வரும் விடுமுறை நாட்களிலும் கூடுதல் சிறப்பு பஸ்கள் இயக்குவதுடன் சுரண்டையிலிருந்து கோவைக்கு தினசரி பஸ் இயக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
செய்தியாளர் அபுபக்கர்சித்திக்




You must be logged in to post a comment.