17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » உசிலம்பட்டி அருகே தாய், மகளை கழுத்தில் கத்தியால் வெட்டிய இளைஞரை உசிலம்பட்டி போலீசார் கைது செய்து விசாரனை நடத்தி வருகின்றனர்.

உசிலம்பட்டி அருகே தாய், மகளை கழுத்தில் கத்தியால் வெட்டிய இளைஞரை உசிலம்பட்டி போலீசார் கைது செய்து விசாரனை நடத்தி வருகின்றனர்.

எழுதியவர்: mohan January 20, 2020, 12:00 pm

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே உள்ள கொக்குடையான்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் முனிபாண்டி.டிரைவராக உள்ளார். இவரது மனைவி கலா(36) இவர் கல்லூத்து அரசு பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இவரது மகள் ஆனந்தசுபேதா(20). இவர் உசிலம்பட்டியிலுள்ள பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் கல்லூரியில் பிஏ இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். இந்நிலையில் இவரது வீட்டின் அருகில் வசித்து வந்த மதன்குமார் (21) என்ற இளைஞர்  வீட்டில் இருந்த தாய் கலா மற்றும் ஆனந்தசுபேதா ஆகிய இருவரையும் கழுத்துபகுதியில் மறைத்து வைத்துள்ள கத்தியில் வெட்டிவிட்டு தப்ப முயன்றார். உடனே அக்கம்பக்கத்தினர் உசிலம்பட்டி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலறிந்த உசிலம்பட்டி போலீசார் தாய், மகள் இருவரையும் சிகிச்சைக்காக உசிலம்பட்டி அரசு மருத்துவமணைக்கு அனுப்பிவைத்தனர். அங்கிருந்து பலத்தகாயங்களுடன் மேல்சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமணைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் உசிலம்பட்டி போலீசார் கைது செய்த மதன்குமாரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

உசிலை சிந்தனியா
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!