கன்னியாகுமரி மாவட்டம் அருமனை திருவரம்புவை சேர்ந்தவர் டேன் சலீல்(42). இவருக்கு சொந்தமான 98 சென்ட் ரப்பர் தோட்டம் இடைகோடு பகுதியில் உள்ள ஜஸ்டின் ஜெயக்குமார்(42) என்பவர் வீட்டின் அருகே உள்ளது. சில மாதங்களுக்கு முன்பு ஜஸ்டின் ஜெயக்குமார், டேன் சலீல் தோட்டத்தில் உள்ள 11 ரப்பர் மரங்களை வெட்டிவிட்டார். இது தொடர்பாக டேன் சலீல் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். இதனால் ஆத்திரத்தில் இருந்த ஜஸ்டின் ஜெயக்குமார் 19.01.2020 அன்று டேன் சலீல் தோட்டத்தில் இருந்த 100 மேற்பட்ட மரங்களை வெட்டி சேதபடுத்தினார். தட்டி கேட்ட டேன் சலீலை கெட்டவார்த்தை பேசி கொலை மிரட்டல் விடுத்தார். உடனே டேன் சலீல் அருமனை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரை விசாரித்த காவல் நிலைய உதவி ஆய்வாளர் சுரேஷ்குமார் குற்றவாளி ஜஸ்டின் ஜெயக்குமாரை கைது செய்து வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்தார்.
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்




You must be logged in to post a comment.