சாலை பாதுகாப்பு வாரத்தையொட்டி ராமநாதபுரத்தில் ஹெல்மெட் அணிவதன் அவசியம் மற்றும் வாகன விழிப்புணர்வு பேரணியை மாவட்ட ஆட்சியர் கொ.வீரராகவ ராவ் தொடங்கி வைத்தார். இதில் வட்டார போக்குவரத்து அலுவலர் கே.செல்வக்குமார், காவல் கூடுதல் கண்காணிப்பாளர் தங்கவேல், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் சு.மகேஸ்வரன், அரசு போக்குவரத்து கழக கோட்ட மேலாளர் பி. தமிழ்மாறன், மண்டபம் வட்டார வளர்ச்சி அலுவலர் ராஜேந்திரன், இராமநாதபுரம் போக்குவரத்து காவல் ஆய்வாளர்
முத்துராமலிங்கம்,மோட்டார் வாகன ஆய்வாளர்கள் ஆர்.இளங்கோ(இராமநாதபுரம்), ஆர்.மாணிக்கம் (பரமக்குடி) உள்பட பலர் கலந்து கொண்டனர். தமிழக அரசு போக்குவரத்து துறை சார்பில் வெளியிட்ட சாலை பாதுகாப்பு வாசகங்கள் அடங்கிய விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை மாவட்ட ஆட்சியர் வீரராகவ ராவ் வெளியிட ஓட்டுநர் பயிற்சி பள்ளி உரிமையாளர்கள் பெற்றுக்கொண்டனர்.ராமநாதபுரம் சரக டிஐஜி., முகாம் அலுவலகம் எதிரே தொடங்கி அரண்மனை சென்ற வாகன விழிப்புணர்வு பேரணியில் மாவட்ட ஆட்சியர் வீரராகவ ராவ் மற்றும் மகளிர், ஓட்டுநர் பயிற்சி பள்ளி உரிமையாளர்கள், போலீசார் கலந்து கொண்டனர்
இராமநாதபுரத்தில் சாலை பாதுகாப்பு வார வாகன விழிப்புணர்வு பேரணி ஆட்சித் தலைவர் பங்கேற்பு
எழுதியவர்: mohan January 20, 2020, 11:18 am




You must be logged in to post a comment.