இராமநாதபுரம் கால்பந்து சங்கம், தமிழ்நாடு உடற்கல்வி இயக்குநர் மற்றும் உடற்கல்வி ஆசிரியர் சங்கம் சார்பில் பொங்கல் பண்டிகையையொட்டி மாவட்ட அளவிலான 6 ஆம் கால்பந்து போட்டி இராமநாதபுரம் ராஜா மேல்நிலைப் பள்ளி விளையாட்டு மைதானத்தில் தொடங்கியது.இப்போட்டியில் மண்டபம் முகாம், கீழக்கரை, பெரியபட்டணம், அழகன்குளம், பனைக்குளம், பெருங்கு|ளம், மேலக்கோட்டை , வண்ணாங்குண்டு, முதுனாள், சித்தார் கோட்டை அணிகள் உள்ளிட்ட 24 அணிகள் கலந்து
கொண்டு விளையாடின. நாக்அவுட் கால் இறுதி போட்டியை கால்பந்து சங்க பொறுப்பாளர்களும் மூத்த வீரர்களுமான ராஜா, தியாகராஜன், ஹரிகிருஷ்ணன் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.தஞ்சி சுரேஷ், முத்துராஜா, தமிழ்நாடு உடற்கல்வி இயக்குநர் மற்றும் உடற்கல்வி ஆசிரியர் சங்க ராமநாதபுரம் செயலாளர் எம்.ரமேஷ், உடற்கல்வி ஆசிரியர்கள் ராஜன், பிரபாகரன், சிவக்குமார், ஜாகீர் உசேன், பாரதி, ராஜ்குமார் ஆகியேரர் கலந்து கொண்டனர். காலிறுதி ஆட்டங்களின் முடிவின்படி அரையிறுதி போட்டிக்கு 8 அணிகள் தகுதி பெற்றன. இதனடிப்படையில் முதல் போட்டியில் முதுனாள், சேதுபதி அரசு கலை கல்லூரி ,இரண்டாம் போட்டியில் மணி கால்பந்து குழு Vs பெரியபட்டணம்,மூன்றாம் போட்டியில் ராமநாதபுரம் ராஜா மேல்நிலைப்பள்ளி மைதான கிரவுண்ட் பாய்ஸ், ராமநாதபுரம் Vs பனைக்குளம்,நான்காம் போட்டி மேலக்கோட்டை Vs அழகன்குளம் அணிகள் மோதுகின்றன.
ராமநாதபுரத்தில் பொங்கல் பண்டிகை கால்பந்து போட்டி அரையிறுதிக்கு 8 அணிகள் தேர்வு
எழுதியவர்: mohan January 20, 2020, 11:13 am




You must be logged in to post a comment.