17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » ஆனந்தம் திட்டத்தில் சுப்பிரமணியபுரம் காவலர் குடியிருப்பில், கண் மற்றும் பல் இலவச மருத்துவ முகாம்

ஆனந்தம் திட்டத்தில் சுப்பிரமணியபுரம் காவலர் குடியிருப்பில், கண் மற்றும் பல் இலவச மருத்துவ முகாம்

எழுதியவர்: mohan January 20, 2020, 11:03 am

மதுரை மாநகர காவலர்கள் 24 மணிநேர பணியின் காரணமாக அவர்களையும் அவர்களது குடும்பத்தினரின் நலனிலும் போதிய அக்கறை செலுத்தமுடியாத காரணத்தினால், தமிழ்நாடு காவலர் நிறைவாழ்வு பயிற்சியினர் மற்றும் நாட்டு நலப்பணியினர் இணைந்து “ஆனந்தம்” திட்டத்தின் மூலமாக மதுரை மாநகர் C2-சுப்பிரமணியபுரம் காவலர் குடியிருப்பில் உள்ள காவல்துறையினர் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கு இலவச கண் மற்றும் பல் பரிசோதனை சிறப்பு முகாம் மதுரை மாநகர காவல் ஆணையர் டேவிட்சன் தேவாசீர்வாதம்,துவக்கிவைக்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் மதுரை நித்திரா மருத்துவமனை மருத்துவர்களால் கண் மற்றும் பல் பரிசோதனை செய்யப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் மதுரை மாநகர் காவல் துணை ஆணையர் சட்டம் & ஒழுங்கு .கார்த்திக்  “ஆனந்தம்” நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளரான அண்ணாநகர் சரகம் (ச&ஒ) உதவி ஆணையர் .லில்லி கிரேஸ், திலகர் திடல் சரகம் (ச&ஒ) உதவி ஆணையர் .வேணுகோபால், C2-சுப்பிரமணியபுரம் சட்டம் & ஒழுங்கு காவல்நிலைய காவல் ஆய்வாளர் .சக்கரவர்த்தி, மதுரா கல்லூரி முதல்வர் டாக்டர்.சுரேஷ், துணை முதல்வர் டாக்டர்.முத்துவேல், நாட்டு நலப்பணி திட்ட அலுவலர் டாக்டர்.நடராஜன், டாக்டர்.மலர்விழி, டாக்டர்.மீனாட்சி, டாக்டர்.கண்ணன் மற்றும் எம்.எஸ்.செல்லமுத்து அறக்கட்டளை ஆகியோர்கள் கலந்துகொண்டனர். இந்த பரிசோதனை முகாமில் 87 காவலர்கள் குடும்பங்களில் உள்ள சுமார் 500 காவல்துறை குடும்பத்தினர்கள் வந்து கலந்துகொண்டு கண் மற்றும் பல் பரிசோதனை செய்து கொண்டு பயனடைந்தனர். இதே போன்று மதுரை மாநகரில் அனைத்து காவல்துறை குடியிருப்புகளிலும் நடத்தப்பட உள்ளது.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!