தர்மபுரி மாவட்டம் பாப்பாரப்பட்டி அருகே உள்ள பாடி கிராமத்தில் நடந்த எம்.ஜி.ஆர் பிறந்தநாள் விழாவில் பூகானஅள்ளி
ஊராட்சியில் உள்ள எர்ரப்பட்டி , எண்டப்பட்டி , மற்றும் பாடி ஊராட்சியிலிருந்து செக்கோடி . பாடி .மூக்கம்பட்டி ஆகிய கிராமத்தை சேர்ந்த 170க்கும் மேற்பட்ட திமுகவின் உறுப்பினர் அடையாள அட்டையை மாண்புமிகு உயர்கல்வித்துறை அமைச்சர் கேபி அன்பழகன் அவர்களிடம் ஒப்படைத்தனர். பின்னர் அஇஅதிமுகவில் தங்களை இனைத்து கொண்டனர் .மாற்று கட்சியில் இருந்து அஇஅதிமுகவில் இனைந்தவர்களுக்கு கட்சி தூண்டு அணிவித்து கட்சியின் வேட்டியை வழங்கி வாழ்த்து தெரிவித்தார்.இந்நிகழ்ச்சியில் தர்மபுரி கிருஷ்ணகிரி மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் வெற்றிவேல், மற்றும் பாலக்கோடு ஒன்றிய சேர்மன் கோப்பால் .பாலக்கோடு நகர தலைவர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்நிகழ்ச்சியில் கட்சி தொண்டர்கள் மற்றும் மாற்று கட்சியினர் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
பாடியில் 170க்கும் மேற்பட்ட மாற்று கட்சியினர் உயர்கல்வித்துறை அமைச்சர் அன்பழகன் முன்னிலையில் அதிமுகவில் இனைந்தனர்.
எழுதியவர்: mohan January 20, 2020, 10:58 am




You must be logged in to post a comment.