இராமநாதபுரம் மாவட்டம் புதுமடத்தில் எஸ்டிபிஐ., கட்சி சார்பில் தடையை மீறி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்ட
செயற்குழு உறுப்பினர் அஜ்மல் ஷெரீப் (ஒன்றிய கவுன்சிலர்) தலைமை வகித்தார். புதுமடம் கிளை செயலர் பஷீர் அகமது வரவேற்றார்.துணை பொது செயலாளர் எஸ்.எம்.ஜெயினுலாபுதீன் சிறப்புரை ஆற்றினார்.மாநில துணைத்தலைவி ஜாஹிரா பீவி, பேச்சாளர் அப்துல் ஜமீல் கண்டன உரை நிகழ்த்தினார்: தேசிய குடியுரிமை சட்ட மசோதா, தேசிய குடிமக்கள் பதிவேடு உள்ளிட்ட 3 சட்ட அமலாக்கத்தை மத்திய அரசு விலக்கி கொள்ள வலியுறுத்தி கோஷம் எழுப்பப்பட்டது. எஸ்டிபிஐ.,மாவட்ட தலைவர் எம்.ஐ.நூர் ஜியாவுதீன், மாவட்ட பொருளாளர் முகமது ரபீக், முன்னாள் தலைவர் அப்துல் வஹாப், முன்னாள் மாவட்ட துணை தலைவர் சோமு, மனிதநேய மக்கள் கட்சி மாவட்ட நிர்வாகிபைசல், புதுமடம் நகர் முன்னாள் தலைவர் சதாம் உசேன் மற்றும் ஜமாத்தார் கலந்து கொண்டனர். அஹமது தீன் நன்றி கூறினார்.
தேசிய குடியுரிமை சட்டத்தை ரத்து செய்யக்கோரி புதுமடத்தில் எஸ்டிபிஐ., தடையை மீறி ஆர்ப்பாட்டம்
எழுதியவர்: mohan January 20, 2020, 10:25 am




You must be logged in to post a comment.