17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » சாலையோர மின்விளக்குகள் அமைக்க வேண்டி பொதுமக்கள் கோரிக்கை!

சாலையோர மின்விளக்குகள் அமைக்க வேண்டி பொதுமக்கள் கோரிக்கை!

எழுதியவர்: Askar January 20, 2020, 8:38 am

சாலையோர மின்விளக்குகள் அமைக்க வேண்டி பொதுமக்கள் கோரிக்கை! மாவட்டம் அய்யலூர் பேரூராட்சி 11- வது வார்டு குளத்துப்பட்டியில் போதிய தெருவிளக்குகளும், சாலையோர மின் விளக்குகளும் இல்லாததால் பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர்.

குறிப்பாக குளத்துப்பட்டியிலிருந்து காக்காயன் குளத்துப்பட்டிவரை, இதுவரை ஒரு மின்விளக்குகூட அமைக்கப்படவில்லை. குளத்துப்பட்டி பள்ளிக்கூடத்தை தாண்டிவிட்டாலே அடுத்து சவரிபட்டி, காக்காயன் குளத்துப்பட்டி வரையிலுமே ஒரே கும்மிருட்டாகவே காட்சியளித்து வருகிறது. இடையில் தனிநபர்கள் சிலர் அவரவர் வீட்டில் மின்விளக்கு அமைத்திருந்த போதிலும் அது சாலையில் பயணிப்போருக்கு எவ்விதத்திலும் உதவிகரமானதாய் இல்லை. இதனால் அடிக்கடி பொதுமக்கள் விஷப்பூச்சிகளின் தீண்டலுக்கு ஆளாக வேண்டிய நிலை இருந்துவருகிறது. நார்மலாக இரவு எட்டு மணிக்கு மேல் இந்தப் பாதையை யாரும் கடக்க முடிவதில்லை. நாளுக்கு நாள் அதிகரித்து வரும் திருடர் பயம் வேறு இப்பகுதி மக்களை வதைத்து வருகிறது. ஏற்கனவே ஆடு, சேவல் மற்றும் வீட்டு உபயோகப் பொருட்களை திருட்டுக் கொடுத்தவர்கள் குளத்துப்பட்டிக்கும் காக்காயன் குளத்துப்பட்டிக்கும் இடையே குறைந்தபட்சம் இரண்டு இடங்களிலாவது சாலையோர மின் விளக்குகள் பொருத்தி மக்களின் துயர் துடைக்க வேண்டும் என்று எழுப்பும் கோரிக்கை தற்போது வலுத்து வருகிறது. இது குறித்த சம்மந்தப்பட்ட நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என பொதுமக்களோடு சேர்ந்து நாமும் எதிர்பார்க்கிறோம்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!