17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » வாட்ஸ்அப்பில் புகைப்படம் அனுப்பும் சேவை முடங்கியது

வாட்ஸ்அப்பில் புகைப்படம் அனுப்பும் சேவை முடங்கியது

எழுதியவர்: mohan January 19, 2020, 5:52 pm

உலகம் முழுவதும் பல நாடுகளில் வாட்ஸ் அப்பில் இருந்து மற்றொருவருக்கு புகைப்படம் அனுப்ப முடியவில்லை. தற்போது உலகம் முழுவதும் நூறு கோடிக்கும் அதிகமான அளவில் வாட்ஸ் அப்பை பயன்படுத்தி வருகிறார்கள் .இந்த நிலையில் கடந்த ஒரு மணி நேரத்திற்கு மேலாக வாட்ஸ் அப்பில் எந்த ஒரு புகைப்படமும் அனுப்ப முடியவில்லை. மேலும் இந்த தகவலை உறுதிப்படுத்த வெளிநாடுகளில் இருக்கும் உறவினர்களுக்கு அவர்களிடம் ஏதாவது ஒரு புகைப்படத்தை அனுப்புங்கள் என்று கேட்ட போது எங்கள் படத்தை அனுப்ப முடியவில்லை என்று தகவல் தெரிவித்தனர். நாங்களும் இங்கிருந்து அவர்களுக்கு படத்தை அனுப்ப முயற்சி செய்தும் அப்பொழுது எங்களாலும் படத்தை அனுப்ப முடியவில்லை. இதனால் வாட்ஸ்அப் சேவை புகைப்படம் அனுப்பும் சேவை முடங்கி உள்ளதா என சந்தேகம் எழுந்து உள்ளது.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!