17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » இராமநாதபுரம் மாவட்ட மக்கள் பாதை சார்பாக சமத்துவ பொங்கல் விழா

இராமநாதபுரம் மாவட்ட மக்கள் பாதை சார்பாக சமத்துவ பொங்கல் விழா

எழுதியவர்: mohan January 19, 2020, 4:54 pm

இராமநாதபுரம் மாவட்ட மக்கள் பாதை சார்பாக மாவட்ட அளவில் சமத்துவ பொங்கல் விழா  முத்துப்பேட்டையில் நடைபெற்றது.இராமநாதபுரம் மாவட்ட மக்கள் பாதை துணை ஒருங்கிணைப்பாளர் கிளாட்வின் தலைமை தாங்கினார்.இராமநாதபுரம் மாவட்ட மக்கள் பாதை துணை ஒருங்கிணைப்பாளர்கள் நூருல் அமீன், சரவணக்குமார் முன்னிலை வகித்தனர்.ஒன்றைக் காலில் கன்னியாகுமரி முதல் சென்னை வரை சமூக விழிப்புணர்வு பரப்புரை செய்த சாதனையாளர் மணிகண்டன் அவர்களுக்கு சமூக விழிப்புணர்வு நாயகன் விருது வழங்கி கௌரவப்படுத்தப்பட்டது.சிறப்பு விருந்தினராக நல்லாசிரியர் பெனடிக்ட் அதிரியான் கலந்து கொண்டு சமூக மாற்றத்தில் இளைஞர்கள் பங்களிப்பின் அவசியத்தை எடுத்துரைத்தார்.

மேலும் இராமநாதபுரம் மாவட்ட அளவில் மராத்தான் நிகழ்வு நடத்துவது பற்றி கலந்துரையாடல் செய்யப்பட்டது.இராமநாதபுரம் மாவட்ட ஒன்றிய பொறுப்பாளர்கள் தினேஷ்,வீரக்குமார்,சிலம்பரசன், ராமு, யோககுமார்,சாகுல் ஹமீது, தீனா , உலகுராஜ் மற்றும் தன்னார்வலர்கள் ராஜேந்திரன், சுரேஷ் குமார்,கிறிஷ் மற்றும் மாணவர்கள் பலர் கலந்து கொண்டனர்.சமத்துவ பொங்கல் விழாவில் கலந்து கொண்ட அனைவருக்கும் மரக்கன்றுகள் வழங்கப்பட்டது. மேலும் குடியரசு தினத்தன்று நடைபெறும் கிராம சபை கூட்டத்தில் அனைவரும் கலந்து கொள்ள வலியுறுத்தப்பட்டது.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!