18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » உசிலம்பட்டியில் கோட்டாட்சியர் சௌந்தர்யா அரசு மருத்துவமணையில் தனது குழந்தைக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கி துவக்கி வைப்பு.

உசிலம்பட்டியில் கோட்டாட்சியர் சௌந்தர்யா அரசு மருத்துவமணையில் தனது குழந்தைக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கி துவக்கி வைப்பு.

எழுதியவர்: mohan January 19, 2020, 12:48 pm

தமிழகம் முழுவதும் 5வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கும் முகாம் நடைபெற்றது. இதன் ஒரு பகுதியாக மதுரை மாவட்டம் உசிலம்பட்டி பேரையூர் ரோட்டில் உள்ள அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் போலியோ சொட்டு மருந்து வழங்குவதற்கான முகாம் அமைக்கப்பட்டு மருத்துவமணைக்கு வரும் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கினர்.

இதில் உசிலம்பட்டி வருவாய் கோட்டாட்சியர் சௌந்தர்யா கலந்து கொண்டு சொட்டு மருந்து முகாமை குழந்தைக்கு சொட்டு மருந்து வழங்கி துவக்கி வைத்தார்.அதனை தொடர்ந்து மருத்துவமணை மருத்துவர்கள் போலியோ சொட்டு மருந்தை வழங்கினர். இதில் உசிலம்பட்டி காவல் துணை கண்காணிப்பாளர் ராஜா, மற்றும் அரசு மருத்துவமணை மருத்துவர்கள், செவிலியர்கள், பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

உசிலை சிந்தனியா
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!