18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » உசிலம்பட்டி -கல்லூரியில் கடந்த 25 வருடங்களுக்கு முன்பு பயின்ற மாணவர்களின் சந்திப்பு நிகழ்ச்சி.

உசிலம்பட்டி -கல்லூரியில் கடந்த 25 வருடங்களுக்கு முன்பு பயின்ற மாணவர்களின் சந்திப்பு நிகழ்ச்சி.

எழுதியவர்: mohan January 19, 2020, 12:36 pm

மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் உள்ள பசும்பொன் முததுராமலிங்கதேவர் கல்லூரியில் கடந்த 25 வருடங்களுக்கு முன்பு 1995 – 1998ம் கல்வியாண்டில் ஊரகவியல் துறையில் கல்வி பயின்ற மாணவர்களின் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சியில் கல்லூரி முதல்வர் ஜோதிராஜன் வரவேற்று பேசினார். முன்னதாக கல்லூரியில் உள்ள மூக்கையாத்தேவர் சிலைக்கும், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் வல்லரசுவின் நினைவிடத்திலும் மலர்தூவி மரியாதை செலுத்தினர்.

அதனை தொடர்ந்து சந்திப்பு நிகழ்ச்சியில் கலந்துகொண்ட மாணவர்கள் ஒருவொருக்கொருவர் தங்களது வாழ்க்கை சம்பவங்கள், கல்லூரியில் நடந்த நெகிழ்ச்சி சம்பவங்களை பகிர்ந்துகொண்டு மகிழ்ச்சியடைந்தனர்.குழு புகைப்படமும் எடுத்துக் கொண்டனர்.மேலும் ஆர்டிஎஸ் கிளப் என்று ஆரம்பித்து அதில் ஆர்டிஎஸ் பயிலும் மாணவர்களை இணைத்து சமூகப்பணியில் ஈடுபடப்போவதாகத் தெரிவித்தனர்.தற்போது பலர் வேற மாநிலம் வெளிநாடுகளில் வசித்த போதிலும் தவறாமல் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டதற்கு சிவன்காளை நன்றி கூறினார்.

உசிலை சிந்தனியா
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!