17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » மதுரையில் நண்பரை கொன்றதால் இளைஞர் ஓட ஓட வெட்டி படுகொலை

மதுரையில் நண்பரை கொன்றதால் இளைஞர் ஓட ஓட வெட்டி படுகொலை

எழுதியவர்: mohan January 19, 2020, 11:55 am

ஆனையூர் எஸ் வி பி நகர் பகுதியைச் சேர்ந்தவர் உதயகுமார்  28. இவர் மீது 3 கொலை வழக்கு நிலுவையில் உள்ளது. இந்த நிலையில் 18/01/2020 மாலை சுமார் 6 மணியளவில் புதுர் S ஆலங்குளம் sRV எண்ணெய் மில் அருகில் சென்று கொண்டிருந்த பொழுது முன்விரோதம் காரணமாக மர்ம நபர்கள் வெட்டியதில் சம்பவ இடத்தில் துடிதுடித்து உயிரிழந்தார். மர்ம நபர்கள் உதயகுமாரை கொன்றுவிட்டு தப்பி சென்றுவிட்டனர். அங்கிருந்த பொதுமக்கள் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவம் அறிந்த கூடல்புதூர் காவல் நிலைய போலீசார் விரைந்து வந்து உடலை கைப்பற்றி அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்ட பொழுது உதயகுமார் பிளேடு பாண்டி என்பவருடைய நண்பரை படுகொலை செய்ததாகவும் அதற்கு பலிக்கு பலி இந்த படுகொலை நடந்திருப்பதாகவும் காவல்துறை விசாரணையில் தெரியவந்தது. இதனால் வழக்குப்பதிவு செய்து குற்றவாளியை தேடி வருகின்றனர் இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவி வருகிறது .

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!