17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » தென்காசியில் போலியோ சொட்டு மருந்து வழங்கும் முகாம்-மாவட்ட ஆட்சியர் துவக்கி வைத்தார்

தென்காசியில் போலியோ சொட்டு மருந்து வழங்கும் முகாம்-மாவட்ட ஆட்சியர் துவக்கி வைத்தார்

எழுதியவர்: mohan January 19, 2020, 11:31 am

போலியோ பாதிப்பில் இருந்து குழந்தைகளைக் காக்கும் வகையில் நாடு முழுவதும் போலியோ சொட்டு மருந்து வழங்கும் முகாம் இன்று நடைபெறுகிறது.தமிழகத்தில் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்க சுகாதாரத் துறை விரிவான ஏற்பாடுகளைச் செய்துள்ளது. அந்த வகையில் தென்காசி மாவட்டத்தில் தேசிய தீவிர போலியோ சொட்டு மருந்து சிறப்பு முகாமினை மாவட்ட ஆட்சித் தலைவர் திரு .G.K.அருண் சுந்தர் தயாளன் இ.ஆ.ப. தென்காசி, நகர்புற ஆரம்ப சுகாதார நிலையத்தில் 19.01.2020 இன்று துவக்கி வைத்தார். அப்போது துணை இயக்குனர் திரு. ரகுபதி, வட்டார மருத்துவ அலுவலர் திரு பால கணேஷ் , சுகாதாரத் துறை அலுவலர்கள் , ரோட்டரி கிளப் குற்றாலம் தலைவர் திரு கார்த்திக் குமார் மற்றும் உறுப்பினர்கள் ஆகியோர் உடன் இருந்தனர்.

செய்தியாளர் அபுபக்கர்சித்திக்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!