17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » குடியுரிமை திருத்தச் சட்டம் குறித்து மூத்த வழக்கறிஞர் கபில் சிபல் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்.!

குடியுரிமை திருத்தச் சட்டம் குறித்து மூத்த வழக்கறிஞர் கபில் சிபல் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்.!

எழுதியவர்: Askar January 19, 2020, 9:18 am

குடியுரிமை திருத்தச் சட்டம் குறித்து மூத்த வழக்கறிஞர் கபில் சிபல் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்.!

மத்திய அரசின் குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்து கேரளா மற்றும் பஞ்சாப் உள்ளிட்ட மாநிலங்கள் அமுல்படுத்த முடியாது தீர்மானம் நிறைவேற்றியுள்ள நிலையில் காங்கிரஸ் மூத்த தலைவரும் மூத்த வழக்கறிஞருமான கபில் சிபல் அதிர்ச்சி தரும் தகவலை வெளியிட்டுள்ளார்.

இந்நிலையில், கபில் சிபல் சனிக்கிழமை கேரளாவில் விழா ஒன்றில் பங்கேற்று பேசிய கபில் சிபல் “சிஏஏ நிறைவேற்றப்பட்டு விட்டால், அதை என்னால் அமல்படுத்த முடியாது என எந்தவொரு மாநிலமும் சொல்ல முடியாது. அது சாத்தியமல்ல. அது அரசியலமைப்புச் சட்டத்துக்கு எதிரானது. நீங்கள் அதை எதிர்க்கலாம், சட்டப்பேரவையில் அதற்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றலாம் மற்றும் சட்டத்தைத் திரும்பப் பெறுமாறு மத்திய அரசை வலியுறுத்தலாம். ஆனால், அரசியலமைப்புச் சட்டத்தின்படி இதை நான் அமல்படுத்தமாட்டேன் என்று கூறுவது சிக்கலையும், கூடுதல் சிரமங்களையுமே ஏற்படுத்தும்.

நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட ஒரு சட்டத்தைப் பின்பற்ற மாட்டேன் என ஒரு மாநில அரசு கூறுவது அரசியலமைப்புச் சட்டத்தின்படி மிகவும் கடினமாகும்” என்றார். சிஏஏவை எதிர்த்து கேரளம், ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், மேற்கு வங்கம் மற்றும் மகாராஷ்டிரம் ஆகிய பாஜக ஆட்சியில் அல்லாத மாநிலங்கள் சிஏஏ மட்டுமல்லாது தேசிய குடிமக்கள் பதிவேடு (என்ஆர்சி) மற்றும் தேசிய மக்கள்தொகைப் பதிவேடு (என்பிஆர்) ஆகியவற்றுக்கும் எதிர்ப்புகளைப் பதிவு செய்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது. இச்சட்டத்தை எதிர்த்து நாடு முழுவதும் தொடர் போராட்டங்களும் நடைபெற்று வருகிறது.

செய்தியாளர் அபுபக்கர்சித்திக்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!