17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » தாய்மார்கள் கவனத்திற்கு: தமிழகம் முழுவதும் இன்று போலியோ சொட்டு மருந்து முகாம்.! 

தாய்மார்கள் கவனத்திற்கு: தமிழகம் முழுவதும் இன்று போலியோ சொட்டு மருந்து முகாம்.! 

எழுதியவர்: Askar January 19, 2020, 8:12 am

தாய்மார்கள் கவனத்திற்கு: தமிழகம் முழுவதும் இன்று போலியோ சொட்டு மருந்து முகாம்.!

தமிழகத்தில் இன்று நடைபெற உள்ள போலியோ சொட்டு மருந்து முகாம்களில் 70 லட்சத்துக்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு சொட்டு மருந்து வழங்கப்படுகிறது.

போலியோ பாதிப்பில் இருந்து குழந்தைகளைக் காக்கும் வகையில் நாடு முழுவதும் போலியோ சொட்டு மருந்து முகாம் இன்று நடைபெறுகிறது. தமிழகத்தில் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்க சுகாதாரத் துறை விரிவான ஏற்பாடுகளைச் செய்துள்ளது. அதன்படி 5 வயதுக்கு உள்பட்ட 70 லட்சத்து 50 ஆயிரம் குழந்தைகளுக்கு இன்று காலை 7 முதல் மாலை 5 மணி வரை போலியோ சொட்டு மருந்து வழங்கப்படும்.

அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், அங்கன்வாடி மையங்கள், சத்துணவு மையங்கள், பள்ளிகள் என மொத்தம் 43 ஆயிரத்து 051 மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

ரயில் நிலையங்கள், பேருந்து நிலையங்கள், சோதனைச் சாவடிகள், விமான நிலையங்கள் ஆகியவற்றில் 1,652 சொட்டு மருந்து மையங்களும், 1,000 நடமாடும் போலியோ சொட்டு மருந்து மையங்களும் அமைக்கப்பட்டுள்ளன.

சொட்டு மருந்து வழங்கும் பணிக்காக அரசுப் பள்ளி ஆசிரியர்கள், சுகாதாரப் பணியாளர்கள், அங்கன்வாடிப் பணியாளர்கள், தன்னார்வலர்கள் என தமிழகம் முழுவதும் மொத்தம் சுமார் 2 லட்சம் பேர் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!