இராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை அருகே உசிலன
கோட்டையைச் சேர்ந்த 3 சிறுவர்கள் உள்பட 10 பேர், திருவாடானை அருகே காரங்காடு சதுப்பு நில காடுகளை சுற்றிப் பார்க்க வனத்துறைக்கு சொந்தமான படகில் மதியம் 2:45 மணியளவில் சுற்றுலா சென்றனர். மணல் திட்டு, மரங்கள் நிறைந்த இயற்கை காட்சிகளை ரசித்து விட்டு திரும்பியபோது படகு கவிழ்ந்தது. இதில் 5 அடி ஆழத்தில் தத்தளித்த 7 பேரும், 2 சிறுவர்களும் (2 வயது, 3 வயது) பத்திரமாக மீட்கப்பட்டனர். உசிலனகோட்டை செல்வகுமார் மகன் விஸ்வஅஜித் (5) வாய் வழியாக தண்ணீர் அதிகம் புகுந்தநிலையில், சிறுவனை, அவனது தாயார் மீட்டார். மருத்துவமனை கொண்டுவரும் வழியில் விஸ்வ அஜித் உயிரிழந்தான். அவனது உடல், திருவாடணை அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது.இது குறித்து தேவிபட்டினம் மெரைன் போலீசார் விசாரித்து வருகின்றனர்.வனச்சரகர் சதீஷ் கூறுகையில், 15 பேர் அமர்ந்து செல்லும் இருக்கை வசதி கொண்ட சுற்றுலா படகில் நேற்று சென்ற 10 பேரில், பெரியவர் 7 பேர் உயிர்காக்கும் சாதனம் அணிந்து சென்றனர். சிறியோருக்கு ஏற்ற வகையில் உயிர் காக்கும் சாதனம் இல்லாததால், 3 சிறுவர்களும் அவர்களின் பெற்றோர் மடியில் அமர்ந்து பயணித்தனர். படகு கரை திரும்பியபோது அனைவரும் ஒரு பக்கமாக அமர்ந்து பயணித்ததால், பாரம் தாங்காமல் படகு கவிழ்ந்து, தண்ணீரை அதிகம் குடித்த சிறுவனுக்கு பதற்றத்தில் மூச்சு திணறல் ஏற்பட்டு மருத்துவமனை செல்லும் வழியில் விஸ்வ அஜித் உயிரிழந்தான் என்றார்.
திருவாடானை அருகே படகு கவிழ்ந்து 5 வயது சிறுவன் பலி
எழுதியவர்: mohan January 18, 2020, 7:04 pm




You must be logged in to post a comment.