17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » உசிலம்பட்டி அருகே உத்தப்புரத்தில் தேர்தல் முன்விரோதம் காரணமாக ஒருவர் அடித்துகொலை.

உசிலம்பட்டி அருகே உத்தப்புரத்தில் தேர்தல் முன்விரோதம் காரணமாக ஒருவர் அடித்துகொலை.

எழுதியவர்: mohan January 18, 2020, 5:38 pm

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே உத்தப்புரத்தைச் சேர்ந்தவர் பால்ராஜ் (45). இவர் நடந்து முடிந்த உள்ளாட்சி தேர்தலில் உத்தப்புரம் ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு போட்டியிட்டு தோல்வியை சந்தித்தார். இந்நிலையில் அதே ஊரைச் சேர்ந்த வெள்ளாளர் சங்கத் தலைவரான முத்தையா (47) உள்ளாட்சி தேர்தலில் பால்ராஜ்க்கு எதிராக சில உள்ளடி வேலைகளில் ஈடுபட்டதாக கூறி முத்தையா மற்றும் சிலர் தகராறில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில் இவர்களுக்குள்; தகராறு முற்றியநிலையில் முத்தையாவை பால்ராஜ் மற்றும் முருகன், பவுன்ராஜ் உட்பட சிலர் சரமாரியாக தாக்கியுள்ளனர். இதில் மயக்கமடைந்த முத்தையா சம்பவஇடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். சம்பவமறிந்த எழுமலை போலீசார் சம்பவஇடத்திற்கு சென்று முத்தையாவின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மதுரை ராஜாஜி மருத்துவமணைக்கு அனுப்பி வைத்தனர். அதனை தொடர்ந்து பால்ராஜ்; எழுமலை காவல் நிலையத்தில் சரணடைந்த நிலையில் மேலும் சிலரை போலீசார் தீவிரமாக தேடிவருகின்றனர்.

உசிலை சிந்தனியா
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!