18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » கங்கணம் கட்டிய குதிரை போல் செயல்படும் மாநகராட்சி அதிகாரிகள். வீணாகும் குடிநீர் புகார்..

கங்கணம் கட்டிய குதிரை போல் செயல்படும் மாநகராட்சி அதிகாரிகள். வீணாகும் குடிநீர் புகார்..

எழுதியவர்: mohan January 18, 2020, 1:37 pm

மதுரை மாநகராட்சிக்கு உட்பட்ட 18-வது வார்டு பொன்மேனி பேருந்து நிறுத்தம் பின்புறம் பல மாதங்களாக குடிநீர் பல ஆயிரக்கணக்கான லிட்டர் வீணாகி சாலையில் ஓடுகிறது. இதை அப்பகுதியில் ஆய்வு செய்யக் கூடிய மாநகராட்சி அதிகாரிகள் ஆய்வு செய்கிறார்களா என தெரியவில்லை என பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். மேலும் பல முறை புகார் கொடுத்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. குதிரைக்கு கங்கணம் கட்டியது போல் அதிகாரிகள் செயல்படுவது இவர்களின் அலட்சியப் போக்கையே காட்டுவதாக சமூக ஆர்வலர்கள் குற்றம்சாட்டுகின்றனர். கோடை காலம் நெருங்கி வருவதால் ஆங்காங்கே குடிநீர் பஞ்சம் தற்போதைய தலைவிரித்து ஆடுகின்றன.  இங்கே பல ஆயிரக்கணக்கான லிட்டர் பல மாதங்களாக வீணாக செல்கிறது. தினசரி ஆய்வு செய்ய வேண்டிய அதிகாரிகள் ஏன் இந்த குடிநீர் உடைப்பை சரி செய்யவில்லை. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்பது அப்பகுதி மக்களின் கோரிக்கையாகும். மேலும் குடிநீர் உடைப்பை உடனடியாக சரி செய்ய வேண்டும் என்பதும் வேண்டுகோளாக உள்ளது.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!