17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » ராமநாதபுரத்தில் ஏழை, எளியோருக்கு புத்தாடைகள் விநியோகம்

ராமநாதபுரத்தில் ஏழை, எளியோருக்கு புத்தாடைகள் விநியோகம்

எழுதியவர்: mohan January 18, 2020, 11:26 am

இராமநாதபுரம் ரோமன் கத்தோலிக் சர்ச்சில் புனித வின்சென்ட் தே பவுல் சபை சார்பில் 47 வது ஆண்டாக ஏழை எளியோர் 200 பேருக்கு புத்தாடை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பெண்கள் 160 பேருக்கு சேலை, ஆண்கள் 40 பேருக்கு வேட்டி, கைலி, துண்டு வழங்கப்பட்டது. விழாவிற்கு சிவகங்கை மத்திய சபை கருத்தாளர் மைக்கேல் தலைமை தாங்கினார். சிறப்பு விருந்தினர் ராமநாதபுரம் ரோட்டரி சங்க செயலாளர் மார்னிங் ஸ்டார் செந்தில்குமார் பேசுகையில், இன்றைய பயனாளிகள் எதிர் வரும் காலங்களில் நீங்கள் மற்றவர்களுக்கு கொடுப்பவர்களாக இருக்க வேண்டும் என்றார். மெட்ரிக் பள்ளிகளின் ஆய்வாளர் (ஓய்வு) ஜேக்கப் ,லயன்ஸ் சங்கம் இருதயராஜ் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். புத்தாடைகள் ஏழை மக்களுக்கு வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை சூசைமாணிக்கம், தனிநாயகம், ஜோசப் வின்சென்ட், ஸ்டாலின் உள்ளிட்ட நிர்வாகிகள் செய்திருந்தனர். ஆல்பர்ட் நன்றி கூறினார்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!