18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » வள்ளுவர் தினம் மற்றும் மாட்டு பொங்கல் தினத்தை முன்னிட்டு மக்கள் பாதை சார்பாக மரக்கன்றுகள் நடும் விழா

வள்ளுவர் தினம் மற்றும் மாட்டு பொங்கல் தினத்தை முன்னிட்டு மக்கள் பாதை சார்பாக மரக்கன்றுகள் நடும் விழா

எழுதியவர்: mohan January 16, 2020, 4:23 pm

இராமநாதபுரம் மாவட்ட மக்கள் பாதை சார்பாக வள்ளுவர் தினம் மற்றும் மாட்டு பொங்கல் தினத்தை தினத்தை முன்னிட்டு இராஜசிங்கமங்கலம் பெருமாள் மடை பகுதிகளில் மரக்கன்றுகள் நடும் விழா மற்றும் நூலகம் அமைப்பது தொடர்பாக கலந்துரையாடல் செய்யப்பட்டது.கிராம இளைஞர் மன்றம் சார்பாக குழந்தைகள் மற்றும் முதியவர்களுக்கான விளையாட்டு போட்டிகள் நடைபெற்றது.

இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினர்களாக இராமநாதபுரம் மாவட்ட மக்கள் பாதை ஒருங்கிணைப்பாளர் நூருல் அமீன், இராஜசிங்கமங்கலம் ஒன்றிய பொறுப்பாளர் ஆசிரியர் பாதுஷா ஆகியோர் கலந்து கொண்டனர்.நிகழ்வுக்கான ஏற்பாடுகளை பெருமாள்மடையைச் சேர்ந்த கல்வி தொலைக்காட்சியில் பணிபுரியும் கவாஸ்கர் மற்றும் விவேக் ஆகியோர் செய்திருந்தனர்.மேலும் சாத்தையா,வடிவேல், சங்கர்,பாலமுருகன், கபில்தேவ் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!