தமிழர் திருநாளாம் பொங்கல் திருநாள் நாடெங்கும் மகிழ்வுடன் கொண்டாடப்பட்டு வருகிறது. திண்டுக்கல் மாவட்டம்
சித்தையன்கோட்டையில் ஒரு பகுதி முழுவதும் முன்னறிப்பு இன்றி மின்சாரம் தடை பட்டுள்ளதால் அப்பகுதி பொதுமக்கள் மின்சாதன பொருட்களை இயக்க முடியாததால் பொங்கல் பண்டிகையை முழு திருப்தியுடன் கொண்டாட முடியாமல் அவதிக்குள்ளாகி உள்ளனர். ஆகவே, மின்சார வாரிய அதிகாரிகள் உடனடியாக தலையிட்டு தடை ஏற்பட்டுள்ள மின்சாரத்தை சீர்படுத்தி தந்து தமிழர் திருநாளை பொதுமக்கள் மனமகிழ்வுடன் கொண்டாடிட உதவி செய்ய வேண்டும் என்று அப்பகுதி வாழ் பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் சார்பாக கோரிக்கை வைத்துள்ளனர்.
ஆத்தூர் தாலுகா சித்தையன்கோட்டையில் அறிவிப்பில்லாத மின் தடையால் பொதுமக்கள் அவதி
எழுதியவர்: mohan January 16, 2020, 11:11 am




You must be logged in to post a comment.