இலங்கையைச் சேர்ந்தவர் முகமது ரிபாஸ், 36. இவர் 2004ல் கொழும்பு வில் இருந்து வேலை நிமித்தமாக துபாய் சென்றார். அங்கிருந்து 2009ல் சுற்றுலா விசாவில் சென்னை வந்தார். அங்கு ஜவுளிக்கடையில் வேலை பார்த்தார். கீழக்கரை கிழக்கு தெருவைச் சேர்ந்த ரோஷன் சல்மா என்பவரை 2011ல் திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு தற்போது 4 குழந்தைகள் உள்ளன. கீழக்கரையில் குடும்பத்துடன் வசித்த முகமது ரிபாஸ் 2014 மார்ச்சில் போதை பவுடர் கடத்திய இவர் உள்பட 4 பேரை கியூ
பிரிவு போலீசார் கைது செய்தனர். நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட இவர்களுக்கு இரண்டரை ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. கடந்த 2019 ஏப்ரலில் இவர் தனது கூட்டாளிகளுடன் இணைந்து வாட்ஸ் அப் குரூப் தொடங்கி இஸ்லாம் மற்றும் நபிகள் நாயகம், இந்துக்களுக்கு எதிராக விஷம பிரசாரம் செய்து வந்தனர். இது தொடர்பாக தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. தொடர் குற்றங்கள் புரிந்த முகமது ரிபாஸ், வெளிநாடுகளில் வேலை நிமித்தமாத ஆட்களை சட்ட விரோதமாக அனுப்பி வந்தார். இதனையடுத்து இவரிடமிருந்து அமைதி மற்றும் நன்னடத்தை உறுதிமொழி ஆவணம் பெறப்பட்டது. உறுதிமொழி ஆவணத்தை மறைத்து உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு மூலம் , வாக்காளர் அடையாள அட்டை, ரேஷன் ஸ்மார்ட் கார்டு, ஆதார் கார்டு உள்ளிட்ட அரசு சலுகைகளை பெற்றார். இது குறித்து காஞ்சிரங்குடி வி.ஏ.ஓ., கீழக்கரை போலீசில் புகார் அளித்தார். அதன்படி, நன்னடத்தை பிணைய காலமான 2022 நவம்பர் 19 ஆம் தேதி வரை சிறையில் அடைக்க கீழக்கரை தாசில்தார் வீரராஜ் உத்தரவிட்டார்.
கீழக்கரையில் தங்கி சட்ட விரோத செயல்களில் ஈடுபட்ட இலங்கை நபருக்கு சிறை
எழுதியவர்: mohan January 16, 2020, 10:42 am




You must be logged in to post a comment.