17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » செய்தியாளர்கள் குறித்து அவதூறு வீடியோ வெளியிட்டவர் மீது போலீசார் வழக்கு

செய்தியாளர்கள் குறித்து அவதூறு வீடியோ வெளியிட்டவர் மீது போலீசார் வழக்கு

எழுதியவர்: mohan January 16, 2020, 10:37 am

இராமநாதபுரத்தைச் சேர்ந்தவர் அப்துல் ரசாக், 55. மாத பத்திரிகை நடத்தி வரும் இவர் ஜன.14 மாலை 5 மணியளவில் தன் முகநூல் பக்கத்தில் வீடியோ பதிவு வெளியிட்டு இருந்தார். அதில், அவர் செய்தியாளர்களை அவதூறு பேசியிருந்தார். இது செய்தியாளர்கள் மற்றும் அவரது குடும்பத்தினரை மனஉளச்சல் ஏற்படுத்தியது. இது சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது. இது தொடர்பாக செய்தியாளர்கள் சங்க அவசரக் கூட்டத்தில், அப்துல் ரசாக் மீது சட்ட பூர்வ நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதன்படி, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வருண்குமாரை, செய்தியாளர் சங்க நிர்வாகிகள் உள்ளிட்ட உறுப்பினர்கள் சந்தித்து புகார் மனு அளித்தனர். சங்கத் தலைவர் தனபாலன் புகாரின்படி, அப்துல் ரசாக் மீது இ.த.ச.பிரிவு 294 பி, 506(i), த.தொ. சட்டப்பிரிவு 66 ( ஏ) பி ஆகிய பிரிவுகளின் கீழ் ராமநாதபுரம் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்தனர்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!