17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » தமிழர் திருநாள் மற்றும் பொங்கல் தினத்தை முன்னிட்டு மக்கள் பாதை சார்பாக மரக்கன்றுகள் நடும் விழா:

தமிழர் திருநாள் மற்றும் பொங்கல் தினத்தை முன்னிட்டு மக்கள் பாதை சார்பாக மரக்கன்றுகள் நடும் விழா:

எழுதியவர்: mohan January 15, 2020, 3:54 pm

இராமநாதபுரம் மாவட்ட மக்கள் பாதை சார்பாக தமிழர் திருநாள் மற்றும் பொங்கல் தினத்தை தினத்தை முன்னிட்டு இராஜசிங்கமங்கலத்தில் மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றது.இராஜசிங்கமங்கலம் விருந்தினர் மாளிகை பின்புறம், தெய்வம்மாள் தெருக்களில் மரக்கன்றுகள் நடப்பட்டது.

இராமநாதபுரம் மாவட்ட மக்கள் பாதை ஒருங்கிணைப்பாளர் நூருல் அமீன் தலைமை வகித்தார்.இராஜசிங்கமங்கலம் ஒன்றிய பொறுப்பாளர் ஆசிரியர் பாதுஷா முன்னிலை வகித்தார். இந்நிகழ்வில் இராஜசிங்கமங்கலம் பகுதிகளைச் சார்ந்த இளைஞர்கள் தர்வீஸ், ராஜா முகம்மது, வெங்கடேஷ் , ஜே.ஆர்.சி அமைப்பினர் மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டனர்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!