மதுரை மாவட்டம் உசிலம்பட்டி தேவர் சிலை அருகில் சுற்றுவட்டார விவசாயிகள் மற்றும் 58கிராம பாசன விவசாயிகள் சங்கம் மற்றும் இளைஞர்கள் சார்பில் முல்லைப்பெரியாறு அணையை கட்டிய பென்னிகுயிக் பிறந்த நாளை முன்னிட்டு பொங்கல் வைத்து வழிபட்டனர். மேலும் பென்னிகுயிக் படத்திற்கு
மலர் தூவி மரியாதை செலுத்தினர். மேலும் அங்குள்ள பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். அதனைத் தொடர்ந்து பொதுமக்களுக்கு பொங்கல் வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில்; 58கிராம விவசாயிகள் சங்க நிர்வாகிகள் சிவபிரகாஷ்,உதயக்குமார்,நேதாஜி மற்றும் ஏராளமான இளைஞர்கள், வழக்கறிஞர்கள் உட்பட பொதுமக்கள் பலர் கலந்துகொண்டனர்.
உசிலம்பட்டியில் பென்னிக்குயிக் பிறந்த நாளை முன்னிட்டு விவசாயிகள் சங்கத்தின் சார்பில் பொங்கல் வைத்து வழிபாடு.
எழுதியவர்: mohan January 15, 2020, 11:29 am




You must be logged in to post a comment.