18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » கல்லூரி மாணவ, மாணவிகள் கொண்டாடிய சமத்துவப் பொங்கல் விழா .

கல்லூரி மாணவ, மாணவிகள் கொண்டாடிய சமத்துவப் பொங்கல் விழா .

எழுதியவர்: mohan January 15, 2020, 10:59 am

காரைக்கால் தாமனாங்குடி என்னுமிடத்தில் இயங்கி வரும் தனியார் கல்லூரியில் பாரம்பரிய முறைப்படி மாணவர்கள் வேட்டியணிந்தும், மாணவிகள் புடவை கட்டியும் பொங்கல் விழாவை உற்சாகத்துடன் கொண்டாடினார்கள். புதுப்பானையில் புத்தரிசியிட்டு பொங்கலிட்ட மாணவிகள், பொங்கல் பொங்கி வரும் நேரத்தில் பொங்கலோ பொங்கல் என்று உற்சாக குரலெழுப்பினார்கள்.

ஆண்கள், பெண்கள் , சாதி, மத பேதமின்றி கொண்டாடப்பட்ட இந்த சமத்துவப் பொங்கலை ஒட்டி, கோலப் போட்டி, ஓவியப் போட்டி, பலூன் உடைத்தல் மற்றும் பானை உடைத்தல் போட்டிகளும் நடத்தப்பட்டன. மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச்சிகளும் நடத்தப்பட்டன.

செய்தியாளர் வி காளமேகம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!