18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » சென்னை இரயில் நிலையத்தில் இருந்து குழந்தையை கடத்தி வந்த நபர் திண்டுக்கல் அருகே கைது

சென்னை இரயில் நிலையத்தில் இருந்து குழந்தையை கடத்தி வந்த நபர் திண்டுக்கல் அருகே கைது

எழுதியவர்: mohan January 15, 2020, 10:17 am

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திலிருந்து கடத்தப்பட்ட 2 வயது குழந்தையை 15 மணி நேரத்தில் மீட்கபட்டு பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்ட நிலையில், இரயிலில் பிச்சை எடுக்க வைப்பதற்காக குழந்தையை கடத்திச் சென்றதாக கைது செய்யப்பட்டவன் வாக்குமூலம் அளித்துள்ளான்.அசாம் மாநிலத்தை சேர்ந்த மர்சினா என்பவர் தனது 6 வயதான மஷிதா, 2 வயதான ரஷிதா ஆகிய இரு மகள்களுடன் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் தங்கி பிச்சை எடுத்து வந்துள்ளார்.

இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு தூங்கிக் கொண்டிருந்த போது 2 வயது குழந்தை ரஷிதாவை காணாததால் அதிர்ச்சியடைந்த மர்சினா, சென்ட்ரல் ரயில்வே போலீசாரிடம் புகார் அளிக்க, அவர்கள் சிசிடிவி காட்சிகளை வைத்து விசாரணையை துவங்கினர்.அதில் அவர்களுடன் தங்கியிருந்த மேற்கு வங்க மாநிலத்தை சேர்ந்த தீபக் மண்டல் என்பவன் தான், குழந்தையை கடத்திச் சென்றது தெரிய வந்தது. இதையடுத்து அவனது புகைப்படத்தை அனைத்து ரயில் நிலையங்களுக்கும் அனுப்பி வைத்து தேடி வந்தனர்.

இந்நிலையில் மும்பையிலிருந்து நாகர்கோவில் சென்ற விரைவுரயிலில் சந்தேகத்துக்கிடமாக குழந்தையுடன் வந்த தீபக் மண்டல் பிச்சை எடுத்துள்ளான். அப்போது குழந்தையை வைத்து பிச்சை எடுத்த தீபக்குடன் சக பயணிகள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.வாக்குவாதத்தை தொடர்ந்து அந்த பெட்டியில் பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் குழந்தையையும், தீபக் மண்டலையும் திண்டுக்கல் அடுத்த பாளையம் ரயில் நிலையத்தில் ரயில்வே போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

அவர்கள் மேற்கொண்ட விசாரணையில் செண்ட்ரல் ரயில் நிலையத்திலிருந்து கடத்திவரப்பட்ட குழந்தை என்பது உறுதியானது. இதையடுத்து சென்ட்ரல் ரயில்வே போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்ட குழந்தை, பின்னர் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது.தீபக் மண்டலை கைது செய்து விசாரணை மேற்கொண்டதில், பிச்சை எடுக்க வைப்பதற்காக குழந்தையை கடத்திச் சென்றதாக அதிர்ச்சி வாக்குமூலம் அளித்துள்ளான்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!