புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி தமிழ்நாடு தீயணைப்பு துறை இயக்குநர் மற்றும் துணை இயக்குனர் மத்திய மண்டலம் திருச்சிராப்பள்ளி அவர்களின் உத்தரவுக்கு இணங்க போகி பண்டிகையை முன்னிட்டு பழைய கழிவு பொருட்கள் மற்றும் பிளாஸ்டிக் பொருட்களை தீ வைத்து எரித்து மாசு ஏற்படாவண்ணம் கொண்டாட பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் விழிப்புணர்வு துண்டு பிரசுரம் வழங்கப்பட்டது. இதில் பொன்னமராவதி தீயணைப்பு மீட்புப் பணி நிலைய அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் தொட்டியம்பட்டி ஊராட்சியில் உள்ள பொதுமக்களுக்கு புகையில்லா போகி குறித்த விழிப்புணர்வு நோட்டீஸ் வழங்கி அவர்களுக்கு அறிவுரை மற்றும் துண்டு பிரசுரங்களை வழங்கினார்கள். இதில் தீயணைப்பு நிலைய மீட்பு பணி அலுவலர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
பொன்னமராவதி தீயணைப்பு மற்றும் மீட்புப் பணித் துறை சார்பில் பொதுமக்களுக்கு புகையில்லா போகி துண்டு பிரசுரம்
எழுதியவர்: mohan January 14, 2020, 9:57 am




You must be logged in to post a comment.