17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » இராமநாதபுரம குயவன் குடியில் முதியோர் பொங்கல் விழா

இராமநாதபுரம குயவன் குடியில் முதியோர் பொங்கல் விழா

எழுதியவர்: mohan January 13, 2020, 12:44 pm

ராமநாதபுரம் அருகே குயவன் குடியில் ஹெல்பேஜ் இந்தியா மற்றும் முதியோருக்கான முதியோர் அமைப்பு சார்பில் முதியோர் பொங்கல் விழா’ நடந்தது. வாழ்வாதார மற்றும் பேரிடர் மேலாண் ஹெல் பேஜ் இந்தியா தலைவர் ராஜேஸ்வர் தேவரா கொண்டா முன்னிலை வகித்தார். பல்வேறு போட்டிகளில் வென்ற முதியோருக்கு பரிசு வழங்கப்பட்டது. ஹெல்பேஜ் இந்தியா மாநிலத் தலைவர் வி.சிவக்குமார், முதியோருக்கான முதியோர் அமைப்பு இயக்குநர் இளங்கோ ராஜரத்தினம், குயவன்குடி ஊராட்சி தலைவர் குப்பை கனி, கிராமத் தலைவர் டி.சுப்ரமணியன், ஊராட்சி மன்ற முன்னாள் தலைவர் ஆர்.காளிதாஸ் துரை உள்ளிட்டோர் பரிசு வழங்கினர். திட்ட ஒருங்கிணைப்பாளர் டி.திருக்கண்ணன் நன்றி கூறினார். ஆலம்பனா முதியோர் வாழ்வாதார திட்ட மேலாளர் கார்த்திக் ராஜா தலைமையில் திட்ட பணியாளர்கள் ஏற்பாடுகளை செய்தனர்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!