18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » கீழக்கரை செய்திகள் » கீழக்கரையில் SDPI சார்பாக பல்வேறு இடங்களில் தண்ணீர் மற்றும் மோர் பந்தல்..

கீழக்கரையில் SDPI சார்பாக பல்வேறு இடங்களில் தண்ணீர் மற்றும் மோர் பந்தல்..

எழுதியவர்: ஆசிரியர் May 16, 2017, 7:36 pm

கீழக்கரை நகரில் இன்று (16-05-2017) SDPI கட்சி சார்பாக பல்வேறு இடங்களில் தண்ணீர் மற்றும் மோர் பந்தல் திறக்கப்பட்டு பொதுமக்களுக்கு தாகம் தீர்க்கும் வகையில் குளிர் பானங்கள் வழங்கப்பட்டது.

கீழக்கரை வடக்குத் தெரு கொந்தக்கருணை அப்பா சாலையில் SDPI தலைவர் கீழை அஸ்ரஃப் தலைமையில் 20வது வார்டு SDPI தலைவர் ரியாஸ் திறந்து வைத்தார்.

கீழக்கரை வள்ளல் சீதக்காதி சாலையில் ஈ-சேவை மையம் அருகில் ஆணையர் வசந்தி மற்றும் தாசில்தார் தமீம்ராசா ஆகியோர் தமைமையில் திறக்கப்பட்டது. மேலும் இந்நிகழ்வில் தலைமை எழுத்தர் சந்திரசேகர், துப்புரவு ஆய்வாளர் திண்ணாயிரமூர்த்தி மற்றும் பல நகராட்சி நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டார்கள்.

இவ்வெவ்வேறு நிகழ்வுகளில் SDTU செயல்வீரர்கள் மற்றும் பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!