18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » கொலை மிரட்டல் விடுத்த 2போ் கைது

கொலை மிரட்டல் விடுத்த 2போ் கைது

எழுதியவர்: mohan January 12, 2020, 12:18 pm

கன்னியாகுமரி மாவட்டம்  அகஸ்தீஸ்வரம் பகுதியை சேர்ந்தவர் எஸ்தர்(52) . இவரது மகள் அந்த பகுதியில் உள்ள அரசு பள்ளியில் படித்து வருகிறார்.சம்பவத்தன்று வடக்கன்பட்டு பகுதியை சேர்ந்த சுதீஷ் மற்றும் அஜீஸ் ஆகியோர் எஸ்தர் அவர்களின் மகளை கிண்டல் அடித்திருக்கிறார்கள். இதனை எஸ்தர் தட்டி கேட்டார். ஆத்திரமடைந்த சுதீஷ் மற்றும் அஜீஸ் ஆகிய இருவரும் சேர்ந்து எஸ்தர் அவரின் வீட்டில் காம்பவுண்டில் நுழைந்து அவரது கணவரின் ஆட்டோவை உடைத்து , கெட்டவார்த்தை பேசி , கொலை மிரட்டல் விடுத்தார்கள். பின்னர் எஸ்தர் கொடுத்த புகாரின் பேரில் தென்தாமரைகுளம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் ராஜசேகரன்  குற்றவாளிகள் இருவரையும் கைது செய்து  வழக்குபதிவு செய்து சிறையில் அடைத்தார்.

செய்தி வி காளமேகம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!