17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » அமைச்சர் விஜயபாஸ்கரின் தனி உதவியாளர் விபத்தில் சிக்கி பலி

அமைச்சர் விஜயபாஸ்கரின் தனி உதவியாளர் விபத்தில் சிக்கி பலி

எழுதியவர்: mohan January 12, 2020, 10:05 am

புதுக்கோட்டை அருகே பொலிரோ வாகனம் புளிய மரத்தில் மோதிய விபத்தில் தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரின் தனி உதவியாளர் உள்ளிட்ட இருவர் உயிரிழப்பு. புதுக்கோட்டை மாவட்டம் பரம்பூரைச் சேர்ந்தவர் ராமச்சந்திரன். இவரது மகன் பவ்(எ)வெங்கடேசன்(31). இவர் கடந்த 8 ஆண்டுகளாக தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரின் தனி உதவியாளராக இருந்து வந்தார். மேலும் இவர் அதிமுகவின் தகவல் தொழில்நுட்ப பிரிவு மாவட்ட தலைவராகவும் இருந்தார்.

இந்நிலையில் புதுக்கோட்டையில் நேற்று மாவட்ட ஊராட்சி குழுத் தலைவர் மற்றும் துணைத் தலைவர், ஒன்றிய ஊராட்சி குழுதலைவர் உள்ளிட்ட பதவிகளில் வெற்றி பெற்ற அதிமுகவினருக்கு தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் வாழ்த்துக்கூறி எம்ஜிஆர் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்துவிட்டு இரவு சென்னைக்கு சென்ற அமைச்சர் விஜயபாஸ்கரை திருச்சி விமான நிலையத்தில் விட்டு விட்டு பொலிரோ காரில் அவரது சொந்த ஊரான பரம்பூருக்கு சென்றுகொண்டிருந்த பவ்(எ) வெங்கடேஷசன் கிளிக்குடி வீரபெருமாள்பட்டி அருகே சாலையில் சென்று கொண்டிருந்த கார் எதிர்பாராதவிதமாக புளியமரத்தில் மோதி விபத்துக்குள்ளானது, இந்த விபத்தில் அமைச்சரின் தனி உதவியாளர் பவ்(எ) வெங்கடேசன் மற்றும் பொலிரோ காரை ஓட்டிச்சென்ற இடையபட்டியைச் சேர்ந்த செல்வம்(38) உள்ளிட்ட இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர், இதனையடுத்து அருகே இருந்தவர்கள் விபத்தில் சிக்கி உயிரிழந்த வெங்கடேஷ் மற்றும் செல்வம் உள்ளிட்ட இருவரின் உடலை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பவ்(எ)வெங்கடேசனின் உடல் இலுப்பூர் அரசு மருத்துவமனையிலும் ஓட்டுநர் செல்வம் என்பவரின் உடல் புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையிலும் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளது, இந்த விபத்து குறித்து அன்னவாசல் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

சாலை விபத்தில் அமைச்சர் விஜயபாஸ்கரின் உதவியாளர் உள்ளிட்ட இருவர் உயிரிழந்த சம்பவம் புதுக்கோட்டையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.நடந்து முடிந்த உள்ளாட்சித் தேர்தலில் பரம்பூர் ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு போட்டியிட்டு அமைச்சரின் தனி உதவியாளர் பவ் (எ) வெங்கடேசனின் தாயார் இந்திராஅம்மா வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!