17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » வேலூர் காட்பாடியில் தேசிய 3-வது சித்த மருத்துவ தின விழா

வேலூர் காட்பாடியில் தேசிய 3-வது சித்த மருத்துவ தின விழா

எழுதியவர்: mohan January 11, 2020, 6:05 pm

தமிழ்நாடு அரசு இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதித் துறை சார்பில் காட்பாடி காந்தி நகர் தொன் போஸ்கோவில் தேசிய சித்த மருத்துவ தின விழா நடைபெற்றது. விழாவிற்கு மாவட்ட பொறுப்பு சித்த மருத்துவ அலுவலர் ஞானமணி தலைமை தாங்கினார். பொதுமக்கள் மற்றும் மாணவர்களுக்கு இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது மூலிகை கண்காட்சியும் இடம் பெற்றது. சித்த மருத்துவ அலுவலர்கள் மல்லிகா, கோவிந்தன், விக்ரம்குமார், பழனி, வேல்விழி, தில்லைவாணன், சஞ்சய் காந்தி உள்ளிட்ட மருத்துவர்கள் இலவச சிகிச்சை அளித்து மருந்து மாத்திரைகளை வழங்கினர்.

கே.எம்.வாரியார்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!