தை 01-ம்தேதி தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகை (15/01/2020) கொண்டாடப் படுவதால் தமிழக அரசு சார்பாக ரூபாய் 1000 மற்றும் பொங்கல் வைப்பதற்கான அரிசி, வெள்ளம் அதற்கான தொகுப்பு பொருட்களை மக்களுக்கு பரிசாக 09/10/11-2020- ம் ஆகிய மூன்று நாட்களுக்கு மக்களுக்கு வழங்க அரசாணை வெளியிட்டு இருந்த
நிலையில் இன்றுகாலை முதல் தமிழகத்தில் உள்ள 35,000 ரேசன் கடைகளில் பனியாளர்கள் மூலமாக அதற்கான பனி துவக்கப்பட்டு ரேசன் அட்டைதாரர்களுக்கு பரிசுதொகுப்பு வழங்கப்பட்டு வரும் நிலையில் திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் தாலுகா சித்தையன்கோட்டை பகுதியில் DD36 தொடக்க வேளான்மை கூட்டுறவு சங்கத்திற்கு கீழ் இயங்கிவரும் ரேஷன் கடைகளில் குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசுதொகுப்பு பொருட்கள் வழங்கப்பட்டது. பொதுமக்கள் நீண்ட வரிசையில் நின்று பரிசு பொருட்களை பெற்றுச்சென்றனர்.
தமிழகத்தில் 35,000 ரேஷன் கடைகளில் ஆயிரம் ரூபாயுடன் பொங்கல் பரிசுத்தொகுப்பு வழங்கும் பணி தொடக்கம்
எழுதியவர்: mohan January 9, 2020, 2:18 pm




You must be logged in to post a comment.